
அன்பிற்குரிய பழையமாணவர்களே! கல்லூரிக் தாயின் அத்தியாவசிய தேவைகள் அறிந்து நீங்கள் வழங்கும் நிதிப் பங்களிப்பு பாராட்டுற்குரியது. எங்கள் பாடசாலையில் நாம் அனைவரும் நன்றாக வளர்க்கப்பட்டோம் என்பதன் சான்றாதாரங்கள் இவை. தற்போதைய மாணவர்களை அர்பணிப்பாக வழிநடத்தி அவர்களுக்கும் கல்லூரி மீதான பற்றை ஏற்படுத்துவது கொக்குவில் இந்து அன்னையிடத்தில் பணியாற்ற ( பலருக்கு எட்டாத) கிடைத்த பெரும் பாக்கியசாலிகள் ஆகிய தற்கால அதிபர் ஆசிரியர்களது தலையாய கடமையாகும். எங்களின் அர்ப்பணிப்பும் முன்மாதிரியும்தான் மாணவர்களுக்கு பாடசாலை மீது பற்றுதலையோ அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறது. திட்டங்களை பெறுவது மட்டும் பாடசாலையின் நோக்காக அமையக்கூடாது கிடைக்கும் அனைத்து வசதிகளையும் உரியமுறையில் பராமரிக்கும் பொறிமுறைமை பாடசாலை முகாமைத்துவம் வழங்குவது தான் கல்லூரிக்கு வசதிகளை வழங்கும் பழைய மாணவர் குழுக்களுக்கு கல்லூரி முகாமை வழங்கும் நன்றிக்கடனும் பொறுப்புக்கூறலும் ஆகும்.

Next Post